Tuesday, March 11, 2014

எச்சரிக்கை தகவல் .(facebook)

எச்சரிக்கை தகவல் .(facebook)

அன்பு சகோதரர்களே,

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி, வ பரக்காத்துஹு

தாங்களுக்கு எச்சரிக்கை செய்யும் விதமாக இந்த தகவலை தருகிறேன். நம் அனைவருக்கும் தினமும் இமெயில், SMS, மூலம் ஏராளமான தகவல்கள், தபால்கள், குறுந்தகவல்கள், படங்கள் வந்து கொண்டிருக்கின்றது.

அதில் அனேக நபர்களுக்கு கீழ்க் கணடவாறு தபால்கள் அடிக்கடி வந்த வண்ணம் இருக்கலாம். குறிப்பாக வளைகுடா நாடுகளில் பணியாற்றி கொண்டிருப்பவர்களுக்கு இச்செய்தி தினமும் வருகிறது. அதில் யாரோ முக பரிச்சயமில்லாத ஒரு பெண் நம்மால் கவரப்பட்டு இருப்பதாகவும், ஆகவே நம்முடன் நட்பு அல்லது காதல் ஏற்படுத்திக் கொள்ள அவள் விரும்புவதாகவும், நிறைய விஷயங்களையும், காதலையும் பரிமாறி கொள்வதற்காக "உங்களது இமெயில் ஐடியிலிருந்து எனது இந்த ஐடிக்கு உடனே தொடர்புக் கொள்ளுங்கள்" என அவளது இமெயில் ஐடியையும் அத்தபாலில் கொடுத்திருப்பாள். மேலும் நமது ஐடி அவளுக்கு கிடைத்ததும் அவளது போட்டோக்களை நமக்கு அனுப்பி வைப்பதாக வாக்களித்திருப்பாள். இச்செய்தி ஃபேஸ்புக், ட்விட்டர், ஜிமெயில்,யாஹூ மற்றும் மொபைல் மெஸ்ஸேஜ் மூலமாகவும் நிறைய பேர்களுக்கு அடிக்கடி வந்துக் கொண்டிருக்கிறது. அவைகளில் இரு மடலை உங்களின் பார்வைக்கு தருகின்றேன்.

1. hello My name is miss jeniffer, I picked interest on you after going through your profile. I really want to have a good friendship with you. Beside i have something very vital to disclose to you, but I found it difficult to express myself here, since it's a public site. Please i will like you to contact me, through my private e-mail via: (jeniffer_weah@yahoo.com) So we can get to know each other better,and i well give you my pictures and also tell you more about me OK.Yours Friend jeniffer, dear i will be waiting for your mail in my mail address[ jeniffer_weah@yahoo.com] so i can give you my picture and also tell you more about my self. jeniffer.

2. Hello Dear, My name is mariama. l am a female I was impressed when i saw your profile here in facebook and will like to establish a long lasting relationship with you. In addition, i will like you to reply me so that we can introduce and know each other better,and i also have something about me to share with you if only you can contact me back directly in my personal email: mariamamAlkhalifa@yahoo.com mariama.

இவைகள் யாவும் பெண்கள் பெயரில் பெண்களின் உதவியுடன் ஆண்கள் செய்து வரும் மாபெரும் மோசடி வித்தைகளாகும். முதலில் நட்பு, காதல் என தொடங்கி, அப்படியே சிறு உதவி, கடன் என தொடர்ந்து, பின் அக்கவுண்ட் நம்பர், பண மாற்றம் என்று ஆகி, இறுதியில் பயமுறுத்தல், மிரட்டல் மூலம் பணம் பறிப்பதில் வந்து முடியும். இதில் தென்னாப்பிரிக்கர்கள் குறிப்பாக நைஜிரியர்கள் ஈடுப்பட்டு வருகிறார்கள். இவர்களின் இந்த மோசடி விளையாட்டுகளில் நமது சகோதரர்கள் ஏராளமானோர் பலியாகிக் கொண்டிருக்கும் செய்திகளும் நமக்கு கிடைக்கிறது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட சிலர் தமது அனுபவங்களையும் முக நூலில் பகிர்ந்தளிக்கவும் செய்திருக்கிறார்கள்.

இவ்வகையான குற்றங்கள் இசட் பிரிவு போலிசார் மூலம் உலகம் பூராவும் துப்பு துலங்கப்பட்டு வருகின்றது. சிலர் பிடிப்பட்டும், ஏராளமானோர் கண்கானிக்கப்பட்டும் இருந்து வந்துக் கொண்டிருக்கின்றனர்.

எனவே நண்பர்களே, தாங்களுக்கு இவ்வகையான தபால்கள், மெஸ்ஸேஜ்கள் வந்தால் அவைகளுக்கு பதிலளிக்காமல் இருப்பது மட்டுமன்றி, அவைகள் குறித்து சம்பந்தப்பட்ட டிபார்ட்மென்ட்டுக்கு ரிப்போர்ட் பண்ணுங்கள். இதன் மூலம் இவ்வகை பிரச்சினையிலிருந்து தாங்கள் விடுப்படுவது மட்டுமன்றி மற்ற அப்பாவி சகோதரர்களையும் காப்பாற்ற முன் வாருங்கள். எச்சரிக்கையாக இருங்கள். மற்றவர்களுக்கும் அறிவுறுத்துங்கள்.

குறிப்பு: ஆங்கிலத்தில் மட்டுமே வந்து கொண்டிருந்த இவ்வகையான மெஸேஜ்கள், தற்போது கூகுள் ட்ரான்ஸ்லேஷன் மூலம் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு... புரியாத தமிழ் நடைகளில் அனைவருக்கும் வந்து கொண்டிருக்கின்றது.

தகவல்:-
அன்புடன்,
அஹமது கபீர்.
(vaikarai.....fb)

No comments:

Post a Comment